search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்படைப்பு வாரண்ட்"

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சஜ்ஜன் குமாரை ஒப்படைக்கும்படி டெல்லி கோர்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது. #AntiSikhRiots #SajjanKumar
    புதுடெல்லி:

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் மகேந்தர் யாதவ் மற்றும் கிஷன் கோக்கார் ஆகியோருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  

    இந்நிலையில், தண்டிக்கப்பட்ட சஜ்ஜன் குமார், மகேந்தர் யாதவ் மற்றும் கிஷன் கோக்கார் ஆகியோர் இன்று டெல்லியில் உள்ள கர்கர்டூமா நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதைதொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.



    இதற்கிடையே சீக்கிய கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கின் விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணைக்கு சஜ்ஜன் குமாரை ஆஜர்படுத்தும்படி, திகார் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவரை இன்று ஆஜர்படுத்தவில்லை. இதையடுத்து சஜ்ஜன் குமாரை, வரும் 28-ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டு, ஒப்படைப்பு வாரண்ட் பிறப்பித்து  நீதிபதி உத்தரவிட்டார்.

    கலவரத்தின்போது சுல்தான்புரியில் சுர்ஜித் சிங் என்ற சீக்கியரை கொன்றதாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், சஜ்ஜன் குமார், பிரம்மானந்த் குப்தா, வேதப் பிரகாஷ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #AntiSikhRiots #SajjanKumar

    ×